Friday, 6 July 2012

எல்லாம் எதில் என்பதில் முடிவாகிறது

எதற்கு ஆசைப்படுகிறாய்
எதை அடைய வெறிகொள்கிறாய்
எதை புறந்தள்ள விரும்புகிறாய்
எதை நோக்கி பயணிக்கிறாய்
எதை விட்டு விலக நினைக்கிறாய்


படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது 
" அறியாமையைவிடவும்  பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை , இந்த வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிக்க அறிவுதானே பெரிய தடையாக இருக்கிறது "

"எதையேனும் அடையத் துடிக்கிற மனம் தான் இந்த வாழ்வின் சாபம் என நினைக்கிறேன் "  (என் அனுபவத்தின் முடிவும் இதனோடு ஒத்தே உள்ளது )


நன்றி : ராஜீ முருகனின்  வட்டியும் முதலும் ஆனந்த விகடன் 

Thursday, 28 June 2012

சாபம் இடுகிறேன்




உணவு வேண்டும் 
ஆனால் 
விவசாயி மட்டும் வேண்டாம் 

தரமான 
உணவு வேண்டும் 
ஆனால் 

விவசாயி வாழ்வு  மட்டும் 
தரம் தாழ வேண்டும் 

என்ன  நீதி .......

பாரதி இன்று உயிரோடு இருந்தால் 
கவிதை எழுதுவான் 

இனி ஒரு விதி செய்வோம் 

விவசாயியை  மதியாத உலகை 
விவசாயத்தை  மதியாத உலகை 
தீயிலிட்டு கொளுத்துவோம்