Sunday, 31 May 2009

என் முத்தம்

என் போராட்டத்தில்
சிந்தும் ஒவ்வொரு ரத்த துளியும் ...
என் காதலி தரும்
முத்தமாய் ...
காதல் கொள்கிறேன்

Saturday, 16 May 2009

கிறுக்கல் ..

காற்றுக்குள் உன் சுவாசம் தேடி ....
உன் உயிருக்குள் .....
என்னை தேடியே .............
என் காதல் பயணிக்கிறேன் .......
***************
நிமிடங்கள் தோறும் ..
நிகழ்வுகளாய் என்னோடு நிழல் கொள்கிறாய் ....

Wednesday, 6 May 2009

உன் மீதான காதல்

உன்னிடம் தெரிவிக்காமலே என் காதல்
தோல்வியுற்றது ..........
நீ இல்லாத
எனது வாழ்க்கை பயணம் .........
வெறுமையானது அல்ல .....
உன் மீது உள்ள காதலால் நிறையப்படுள்ளது .....
காலம்என்ற பொழுதினிலே
தென்றலாய் வந்து .....
என்னை புயலாய் கடந்து சென்றாய் .......
எனக்குள் கலகம் கொள்ள செய்து ....
அமைதியில் என் நினைவை நீயே கொண்டாய்.......

எனது நாழிகையின் துக்கங்கள்

தேவதையே .........
உன்னை நான் மறக்க நினைத்தாலும்...
என் துடிப்பிலே
நீயே உயிர் கொள்கிறாய் ..........
உன் பார்வை முன்னே
நான் வரவே என் ஆன்மா
ஏங்குகிறது ....
உன்னை நான் கடக்கையில்
மௌனமாய் என் காதல்
உன்னிடமே பேசுகிறது ...........
உன் கண்ணோடு பேசவே ..
என் கண்கள் தினமும் விழிக்கிறது....
ஏன் அந்தரங்க வாழ்விலே
நீயே உரிமை கொள்கிறாய் ........
என் பொது வாழ்வின் லட்சியத்தில் ...
நீயே என்னை செலுத்துகிறாய் .......
உன் மீதான எம்
காதல் என் தடைகள் அல்ல .......
என் நதியின் ஓட்டமும் நீதான் .....
என் சங்கமும் நீ தான்.......
முற்று கொடுத்தாய் ...
பிரிவு தந்தாய்.............
என் காதல் மறுப்பு தந்தாய் ..........
எம் மீது ....
வெறுப்பை உமிழ்தாய்............
என் ரசிகையே ...
என் கவிதையின் ஆழத்தில்
நீயே அமிழ்ந்துகொண்டாய்........
என்னுள்ளே கரு கொண்டாய்.......

Monday, 4 May 2009

என் காதல் .....

என் ரசிகையே ...
நீ வாசித்த பின் தான் .....
நான் கவிதை கொண்டேன் ......
என் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் ...
நீயே உயிர் கொண்டாய்..........
என்னுள்ளே நீட்சை கொண்டாய்........
என் நினைவில்
அட்டை பூச்சியாய் ஓட்டி கொண்டாய் ...
என் எண்ணத்தில் உணர்வு கொண்டாய் ........
எங்கும் நிறைந்தருளும்
பரம்பொருளாய் எங்கெங்கும் ....
நீயே எனக்கு காட்சி தந்தாய்.....
உன் கண்ணோடு பேச கற்று கொடுத்தாய்
உன் இதழ்கள் தோறும் ....
கமழும் பொய்யினை.....
கண்டு என்னை கலங்க வைத்தாய் .....
நட்பாய் என்னுடன் வந்தவளை...
காதலியாய் அழைத்து செல்ல வைத்தாய் ....
உன் கண் முன் .....
மாயையில் மடிந்து விட்டேன் ......
உன் மீது காதலில் ......
நான் உயிர் பெற்று இறந்து விட்டேன் ......
முடிவாய்...
என்றென்றும் உன்னை நான் காதலிப்பேன் ..........
என் கல்லறையிலும் ........

உன் மீதான என் காதல்

உயிருடன் இருக்கும் .....