Thursday, 14 October 2010

என்ன மாயையோ

மனிதனாய் பிறப்பதை விட நாயாய் பிறப்பதுவே இன்புற்ற இந்த உலகவாழ்க்கையில் மேலானது.........
மனிதன் அவனின் / அவளின் வாழும் வாழ்க்கை தான் எதோ பிறந்தவுடன் அழுகிறான் வாழும்போது மற்றவனை அழித்து வாழுகிறான் பொறாமையில் இன்புறுகிறான் .......
அடுத்தவன் துன்பத்தில் மன மகிழ்வு கொள்கிறான்...
பணத்திற்காக அவன் அன்பு பாசம் ஏன் அவனையும் விற்கிறான் .....
தான் ஆறு அறிவு படைத்தவன் என்கிறான் தன்னை உயர்ந்தவன் என்கிறான் .....
சக உயிரையும் மதிக்க தெரியாதவன்
தான் தான் கடவுளின் படைப்பில் உயர்ந்தவன் என்கிறான் .........

கடவுள் என்கிறான் கோவில் என்கிறான் வேதம் என்கிறான்
எல்லாமே சொல்கிறான் வார்த்தையிலே
எங்கே அதுவடா வாழ்கையிலே .......

பிறரை துன்புறுத்துகிறாய் நீ இன்புற்றே வாழ்கிறாய்
என்ன முரண்பாடடா உன் படைப்பு......உன் வாழ்க்கை
சொல்லடா என் மதிகெட்ட மானுடா

மனித சமுதாயமே இந்த உலகத்திற்காக என்ன செய்தாய்
நீ உயர்வு பெற்று விட்டாய்..........

Monday, 23 August 2010

என் அன்பே........என் இலட்சியமே (கடவுள் )........

கடவுளே எனக்கு கட்டளையிடுவாய்

திசை எங்கும் உன் ஒளியே காணவைத்தாய்
கேட்கும் ஒலி எங்கும் உன் குரலே
செவிதனில் நிறைய வைத்தாய்
நான் பேசும் மொழிஎங்கும்
உன் நாமம் திருநாமம் ஒலிக்க வைத்தாய்

உண்ணும் உணவில் நிறைந்து அருளினாய்
செல்லும் வழியெங்கும் என்னை சூழ்ந்து கொண்டாய்
என் உயிரின் உட்பொருள் ஆனாய்
உன்பால் என்னை ஆட்கொண்டாய்

நெஞ்சம் கனல் கொள்கிறதே
எத்தனை காலம் தான் நீ
என்னை கனவினிலேயே வாழவைப்பாய்
என்னை ஏன் வஞ்சிக்கிறாய்

நித்தம் உன் திருவடி கொள்கிறேன்
என்னை ஏன் பித்தனாக்குகிறாய்

வெறுமை , புலம்பல்
தூக்கமில்லா இரவுகள்; விழிப்பில்லா பகல்கள்
எந்தன் இறைவா
போதும் உந்தன் சோதனை
கடவுளே
என் வழிதனை திறந்து விடுவாய்
உனது வேத மொழிதனை
மக்களுக்கா செயலாற்றிட
கடவுளே எனக்கு கட்டளையிடுவாய்..........