மனிதனாய் பிறப்பதை விட நாயாய் பிறப்பதுவே இன்புற்ற இந்த உலகவாழ்க்கையில் மேலானது.........
மனிதன் அவனின் / அவளின் வாழும் வாழ்க்கை தான் எதோ பிறந்தவுடன் அழுகிறான் வாழும்போது மற்றவனை அழித்து வாழுகிறான் பொறாமையில் இன்புறுகிறான் .......அடுத்தவன் துன்பத்தில் மன மகிழ்வு கொள்கிறான்...
பணத்திற்காக அவன் அன்பு பாசம் ஏன் அவனையும் விற்கிறான் .....
தான் ஆறு அறிவு படைத்தவன் என்கிறான் தன்னை உயர்ந்தவன் என்கிறான் .....
சக உயிரையும் மதிக்க தெரியாதவன்
தான் தான் கடவுளின் படைப்பில் உயர்ந்தவன் என்கிறான் .........
கடவுள் என்கிறான் கோவில் என்கிறான் வேதம் என்கிறான்
எல்லாமே சொல்கிறான் வார்த்தையிலே
எங்கே அதுவடா வாழ்கையிலே .......
பிறரை துன்புறுத்துகிறாய் நீ இன்புற்றே வாழ்கிறாய்
என்ன முரண்பாடடா உன் படைப்பு......உன் வாழ்க்கை
சொல்லடா என் மதிகெட்ட மானுடா
மனித சமுதாயமே இந்த உலகத்திற்காக என்ன செய்தாய்
நீ உயர்வு பெற்று விட்டாய்..........
Read the short story "Arisi" by Sujatha.
ReplyDelete