Monday, 14 February 2011

எங்கே என் பட்டாம்பூச்சி


பட்டாம்பூச்சியை பற்றிய நினைவுகள் என் நெஞ்சில் சில வாரங்களாக
மனதில் துன்ப நிழலாடுகிறது மனம் இறுக்கம் அடைகிறது
எதோ என்னை வெறுமை பீடித்துவிட்டதாய் எண்ணுகிறேன்
"பட்டாம்பூச்சி என் நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றது
அது சுற்றி சுற்றி வந்தால் என் ஆசை நெஞ்சை தட்டுகின்றது
காதல் சொல்லவந்தேன் உன்னிடத்தில "
எவளோ அழகான வரிகள் இந்த வரிகள் அடிக்கடி நான் உச்சரிக்கிறேன்
ஆனால் அந்த நிஜ பட்டாம்பூச்சியை தேடுகிறேன்
நான் கடந்த வாரம் எனது சொந்த ஊர்னிர்க்கு சென்ற பொழுது
சிறு வயது காலத்து நியாபகத்தில் நான் நினைவில் ஆழ்ந்த தருணத்தில்
சிறு வயதில் பட்டாம்பூச்சி பிடிப்பதற்காக நண்பர்களோடு
சுற்றி அலைவோம் யார் அதிகம் பிடிக்கிறார்கள் என்று போட்டிவேற அதுவில்
அதில் கொடுமை என்ன வென்றால் பூச்சியை உயிரோடு பிடிக்காமல்
கொன்று பிடித்து அதற்க்கு இறுதி ஊர்வலம் ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடுவோம்........
அப்படி கல் நெஞ்சம் படைத்த பாவிகள் நாங்கள்
இந்த நெஞ்ச பதிப்பு நினைவில் என்னை வாட்ட
அந்த அழகுறு பூச்சியை பார்க்க எண்ணினேன்
ஆனால்
ஊர் சென்று பார்த்தால் அங்கே பட்டாம்பூச்சி காண்பதே அரிது
இல்லை உண்மை என்னவென்றால் நான் அங்கு காணவேயில்லை
...........
கண்கள் இன்று கண்ணீர் வடிக்கிறது
கனவோடு சென்றேன் வெறுமை பிடித்து கனத்த இதயத்தோடு
சிறு வயதில் எம் வீட்டு தோட்டத்தில் பட்டம்புச்சி பறக்கும்
அழகுற கலையின் நினைவோடு அகன்றேன்
ஏன் எதை இங்கே பதிகிறேன் என்று எனக்கே தெரியவில்லை
என் நெஞ்சில் வாடும் அந்த சோகத்தினை பகிர நினைக்கிறேன்......

சென்னை மாநகரம் வந்த பின்பும் அதன் நினைவிலே ஆழ்கிறேன்
அதை இன்று காணமுடியாமல் போனதிருக்கு .........
என்று காண்போம் என்ற ஏக்கம் இன்று வதைக்கிறது தினமும்

நாம் இன்று பலமாக இயற்கை எல்லாம் அழித்து வளர்ந்துவிட்டோம்
அதனால் என்ன பயன் அன்று நம்மோடு பயணித்த உன்ன இயற்கையின் படைப்புகள் இன்று நம்மோடு இல்லையே
நாம் என்ன சாதித்தோம் ................

குற்ற உணர்ச்சியோடு இந்த பதிவினை கிறுக்குகிறேன்
அந்த பட்டாம்புச்சி சிறகு விரித்து பறக்கும் குற்ற நினைவோடு .........